/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பாரதி பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் சதம்
/
பாரதி பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் சதம்
ADDED : மே 07, 2024 11:12 PM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பாரதி கல்வி நிறுவன மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளனர்.
பாரதி கல்வி நிறுவனங்களான கள்ளக்குறிச்சி, சின்னசேலம், வடக்கனந்தல் பள்ளியில் பயின்ற மாணவ, மாணவிகள் அனைவரும் தேர்ச்சி புரிந்து 100 சதவீதம் பெற்றுள்ளது. மாணவி வர்னிக்கா 600க்கு 582 மதிப்பெண், மாணவர் அதியமான் 577, மாணவி சுவாமதி 575 மதிப்பெண் பெற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர்.
500 மதிப்பெண்ணுக்கு 90 மாணவர்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். பள்ளிக்கு பெருமை சேர்ந்த மாணவ மாணவிகளை கல்வி நிறுவனங்களின் செயலாளர் லட்சுமி, தாளாளர் கந்தசாமி, பள்ளி முதல்வர் ராமசாமி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
கல்வி நிறுவன செயலாளர் கூறுகையில், 'மாணவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் பெற்றோர்களின் நம்பிக்கைக்கேற்ப ஆசிரியர்களின் கடுமையான உழைப்பால் பாரதி கல்வி நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் இலக்குடன் வெற்றியுடன் அடைந்து வருகிறோம். கல்வி தரத்தை மென்மேலும் பல மடங்குகள் உயர்த்தி மாணவர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தும் வகையிலான அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என்றார்.

