ADDED : மே 30, 2024 06:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: சின்னசேலத்தில் பைக் திருடுபோனது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
சின்னசேலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கவேல் மகன் பாண்டியராஜன்,33; இவர் கடந்த 11ம் தேதி இரவு தனது யமகா எப்-இஸட் பைக்கினை வீட்டிற்கு முன் நிறுத்தியுள்ளார்.
மறுநாள் 12ம் தேதி காலை எழுந்து பார்த்த போது பைக் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்து ,பல்வேறு இடங்களில் தேடினார். எங்கு தேடியும் கிடைக்காததால் காணாமல்போன பைக்கினை கண்டுபிடித்து தரக்கோரி பாண்டியராஜன் சின்னசேலம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன்பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.