நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்; சங்கராபுரம் அருகே பைக் திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சங்கராபுரம் அடுத்த ஊராங்காணி கிராமத்தைச் சேர்ந்தவர் சாய்ராம் மகன் சதிஷ்குமார், 23; இவர், நேற்று முன்தினம் தனது ஸ்பிளண்டர் பைக்கில் சங்கராபுரம் அரசு மருத்துவமனை முன் நிறுத்திவிட்டு உள்ளே சென்று, சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை.
இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.