/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பைக் திருட்டு: போலீசில் புகார்
/
பைக் திருட்டு: போலீசில் புகார்
ADDED : ஆக 17, 2024 03:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே பைக்கை திருடிச் சென்ற மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த உலகங்காத்தான் கிராமத்தை சேர்ந்தவர் ராஜீவ்,40; இவர் தச்சூரில் உள்ள அரிசி ஆலையில் மூட்டை துாக்கும் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். கடந்த 6ம் தேதி அரிசி ஆலை முன்பு தனது ஸ்பிளண்டர் பிளஸ் பைக்கை நிறுத்தி விட்டு சென்று, பின்னர் மீண்டும் வந்து பார்த்தபோது பைக் திருடுபோனது தெரிந்தது.
இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.