திருக்கோவிலுார்: திருக்கோவிலூரில் பைக் திருடியவரை போலீசார் கைது செய்து பறிமுதல் செய்தனர்.
திருக்கோவிலுார், சந்தப் பேட்டையை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் அய்யனார், 39; கடந்த 30ம் தேதி தனக்கு சொந்தமான பைக்கை திருக்கோவிலுார் அரசு மருத்துவமனை எதிரில் நிறுத்திவிட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை.
அய்யனார் புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வசாரித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்ற முன்தினம் சப் இன்ஸ்பெக்டர் நந்தகோபால் மற்றும் போலீசார் நான்கு முனை சந்திப்பில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். சந்தேகத்திற்கிடமான பைக்கை ஓட்டி வந்தவரை மறித்து விசாரணை நடத்திய போது, காணாமல் போன அய்யனார் பைக் எனவும், திருடியது அரசன்குப்பத்தைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் விஜயகுமார், 40; என தெரிய வந்தது.
இது குறித்து திருக்கோவிலூர் போலீசார் வழக்குப் பதிந்து பைக்கை பறிமுதல் செய்து விஜயகுமாரை சிறையில் அடைத்தனர்.