/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பைக்குகள் மோதல் கூலித் தொழிலாளி பலி
/
பைக்குகள் மோதல் கூலித் தொழிலாளி பலி
ADDED : ஏப் 21, 2024 06:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் கூலித் தொழிலாளி இறந்தார்.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த ஆனைமடு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் குமரேசன், 31; கூலித் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் மாலை சொந்த வேலை காரணமாக ஹீரோ ஹோண்டா பைக்கில் புதுப்பட்டி சென்று மீண்டும் ஆனைமடு கிராமத்திற்கு வந்து கொண்டிருந்தார்.
புளியங்கோட்டை அருகே வந்தபோது, எதிரே வந்த பைக், குமரேசன் ஓட்டி வந்த பைக் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த குமரேசன் சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் இறந்தார்.
வட பொன்பரப்பி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

