தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ பைக்குகள் தீ வைத்து எரிப்பு; பூட்டுக் கடைக்காரருக்கு வலை

பைக்குகள் தீ வைத்து எரிப்பு; பூட்டுக் கடைக்காரருக்கு வலை

பைக்குகள் தீ வைத்து எரிப்பு; பூட்டுக் கடைக்காரருக்கு வலை


ADDED : ஜூன் 17, 2024 01:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 17, 2024 01:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில், பெட்ரோல் ஊற்றி பைக்குகளுக்கு தீ வைத்த பூட்டுக் கடைக்காரரை போலீசார் தேடி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் சத்தியநாராயணன்,61; இவருக்கு சொந்தமான, சேலம் மெயின் ரோட்டில் உள்ள கட்டடத்தில், சாமுவேல் என்பவர் பூட்டு கடை வைத்துள்ளார்.

இந்நிலையில், கடையை காலி செய்யும்படி, சாமுவேலுவிடம், சத்தியநாராயணன் கடந்த 15ம் தேதி கூறியுள்ளார்.

அதற்கு சாமுவேல் மறுப்பு தெரிவித்ததுடன், நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் பெட்ரோல் கேனுடன் சத்தியநாராயணன் வீட்டிற்கு சென்று, எப்படி கடையை காலி செய்ய கூறலாம் என, சத்தம் போட்டுள்ளார்.

சத்தியநாராயணன் கதவை திறக்காததால், வீட்டின் சுவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி சென்றுள்ளார். அப்போட்டு வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த 3 பைக்குகள் தீப்பிடித்து எரிந்தது.

இதுகுறித்து தகவலின்பேரில் கள்ளக்குறிச்சி தீயணைப்பு வீரர்கள், விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

இருந்தும் 3 பைக்குகளும் எரிந்து சேதமானது. இதுகுறித்த புகாரின்பேரில் சாமுவேல் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us