/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
இருதரப்பு மோதல்: 6 பேர் மீது வழக்கு
/
இருதரப்பு மோதல்: 6 பேர் மீது வழக்கு
ADDED : ஏப் 30, 2024 11:19 PM
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
உளுந்துார்பேட்டை அடுத்த ஆர்.ஆர்.குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் இளையராஜா, 40; இவர் கடந்த 28ம் தேதி மதியம் 2.30 மணியளவில் மொபட்டில் எம்.எஸ்.தக்கா அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது மூலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த கண்ணன் மகன் ஆகாஷ், 23; திருமலை முருகன் மகன் அன்பரசன், 23; ஆகியோர் ஹோண்டா பைக்கில் இளையராஜாவின் பைக் மீது மோதுவது போல் ஓட்டி சென்றனர். இதனால் இளையராஜாவுக்கும் ஆகாஷுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.
இதுகுறித்து இரு தரப்பு புகாரின் பேரில், இளையராஜா, அவரது மகன்கள் முகிலன், 18; 15 வயது சிறுவன் மற்றும் ஆகாஷ், அன்பரசன், பால்ராஜ் மகன் விக்னேஷ், 23; ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.