ADDED : செப் 06, 2026 08:34 PM
அ நிறம் | அளவு
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் தமிழ் சங்கம் சார்பில் வ.உ.சி., மற்றும் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
ரிஷிவந்தியத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, தமிழ்ச் சங்கத் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ராமகிருஷ்ணன், ஆசிரியர்கள் விஜயகுமாரி, தங்கமணி முன்னிலை வகித்தனர். சங்க செயலாளர் ராசகோபால் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக சங்க சிறப்பு தலைவர் ராமலிங்கம், காப்பாளர் செல்வராஜ் ஆகியோர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் வ .உ.சி., படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தியாகதுருகம் பாரதியார் தமிழ் சங்கத்தலைவர் துரைமுருகன், சீனு, முரளி, ஜெயந்தி, தமிழரசி, மாரியம்மாள், முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
பொருளாளர் விஜயகுமார் நன்றி கூறினார்.
