/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
முனிவாழை கிராமத்தில் பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை
/
முனிவாழை கிராமத்தில் பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை
ADDED : செப் 11, 2024 01:51 AM

ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் அடுத்த முனிவாழை கிராமத்தில் பா.ஜ., சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு பா.ஜ., மாவட்ட தலைவர் அருள் தலைமை தாங்கினார்.
மாவட்ட பொதுச் செயலாளர் ராஜேஷ், துணை தலைவர் கருணாகரன், ஒன்றிய தலைவர் சின்னதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சதிஷ்குமார் வரவேற்றார்.
நிகழ்ச்சியில், மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று முனிவாழை கிராமத்தில் புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் குமரவேல், துணை தலைவர் கஜேந்திரன், சரவணன், உள்ளாட்சி பிரிவு மாவட்ட தலைவர் ராஜேந்திரன், கலை கலாசார பிரிவு தலைவர் சுந்தர்ராஜன், முன்னாள் மாவட்ட செயலாளர் சிவகுரு, முனிவாழை கிராம நிர்வாகிகள் கண்ணு, விஜயகுமார், ராணி பிரபு, ராஜேந்திரன் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.