/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மொழி கொள்கையை வைத்து தமிழக மக்களை ஏமாற்ற முடியாது பா.ஜ., வேதசுப்ரமணியம் பேச்சு
/
மொழி கொள்கையை வைத்து தமிழக மக்களை ஏமாற்ற முடியாது பா.ஜ., வேதசுப்ரமணியம் பேச்சு
மொழி கொள்கையை வைத்து தமிழக மக்களை ஏமாற்ற முடியாது பா.ஜ., வேதசுப்ரமணியம் பேச்சு
மொழி கொள்கையை வைத்து தமிழக மக்களை ஏமாற்ற முடியாது பா.ஜ., வேதசுப்ரமணியம் பேச்சு
ADDED : மார் 07, 2025 07:17 AM

கள்ளக்குறிச்சி : மொழிக்கொள்கையை வைத்து தமிழக மக்களை ஏமாற்ற இது அண்ணாதுரை காலம் அல்ல, அண்ணாமலை காலம் என பா.ஜ., செங்கல்பட்டு வடக்கு மாவட்ட முன்னாள் தலைவர் வேதசுப்ரமணியம் பேசினார்.
மும்மொழி கல்வியை ஆதரித்து கள்ளக்குறிச்சி மாவட்ட பா.ஜ., சார்பில் 'சமக்கல்வி எங்கள் உரிமை' என்ற நோக்கில் நேற்று கையெழுத்து இயக்கம் துவங்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி அண்ணா நகரில் இருந்து மாவட்ட தலைவர் பாலசுந்தரம் தலைமையில் ஏமப்பேர் வரை ஊர்வலமாக சென்று அப்பகுதி மக்களிடம் தமிழகத்தில் மும்மொழி கல்வி அமைப்பதை ஆதரித்து 75 பேரிடம் கையெழுத்து பெற்றனர்.
அப்படிவத்தை பெற்ற சிறப்பு விருந்தினரான செங்கல்பட்டு வடக்கு மாவட்ட முன்னாள் தலைவர் வேதசுப்ரமணியம் மாவட்டத்தில் 2 லட்சம் கையெழுத்துக்கள் பெற அறிவுறுத்தி பேசியதாவது:
தமிழகத்தில் சமக்கல்வி எங்கள் உரிமை எனும் நோக்கில் பா.ஜ., தலைவர் அண்ணாமலை கையெழுத்து இயக்கம் துவங்கிய 12 மணி நேரத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் டிஜிட்டல் முறையில் கையெழுத்திட்டு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
புதிய தேசிய கல்வி கொள்கையை தமிழக மாணவர்களுக்கு வழங்குவதே எங்கள் லட்சியம். தனியார் பள்ளியில் பணம் கட்டி படிக்கும் மாணவர்களுக்கு கிடைக்கும் மும்மொழிப்பாட வசதி அரசு பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே சமக்கல்வியின் தத்துவம்.
தி.மு.க.,வினர் நடத்தும் அனைத்து பள்ளிகளிலும் மும்மொழி கல்வி திட்டம் உள்ளது. ஆனால் அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்த வசதியை கிடைக்காமல் செய்வதே தி.மு.க., அரசின் நோக்கமாக உள்ளது. 1965ல் அண்ணாதுரை, கருணாநிதி மொழிக்கொள்கையை வைத்து மக்களை ஏமாற்றி வந்தனர். ஆனால் தற்போது 2025-ல் அந்த மாய பிம்பம் எடுபடாது. இது அண்ணாதுரை காலம் அல்ல, அண்ணாமலை காலம்.
சமக்கல்வியை ஆதரித்து திருச்சி, வேலுார், சென்னை பகுதிகளில் பொதுக்கூட்டமும், தொடர்ந்து மே 11-ல் 20 மண்டலங்களை இணைத்து மாபெரும் பொதுக்கூட்டமும் நடத்தப்பட உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் மாவட்ட பொது செயலாளர்கள் முருகன், கண்ணன், செந்தில்குமார், தியாகராஜன், ஆரூர் ரவி, மாவட்ட நிர்வாகிகள் ஹரி, சர்தார், சிவசக்தி, மகேந்திரன், கோவிந்தன், வினாயகம், ராமச்சந்திரன், வில்சன், துரை, ராஜசுந்தரம், கிருஷ்ணமூர்த்தி, சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.