/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அ.தி.மு.க.,வில் கருப்பு ஆடுகள்: நிர்வாகிகளுக்கு குமரகுரு 'டோஸ்'
/
அ.தி.மு.க.,வில் கருப்பு ஆடுகள்: நிர்வாகிகளுக்கு குமரகுரு 'டோஸ்'
அ.தி.மு.க.,வில் கருப்பு ஆடுகள்: நிர்வாகிகளுக்கு குமரகுரு 'டோஸ்'
அ.தி.மு.க.,வில் கருப்பு ஆடுகள்: நிர்வாகிகளுக்கு குமரகுரு 'டோஸ்'
ADDED : ஏப் 11, 2024 05:01 AM
கள்ளக்குறிச்சி தொகுதியில் தி.மு.க.,விற்கு மறைமுக ஆதரவளிக்கும் அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு மாவட்ட செயலாளர் குமரகுரு கிடுக்கு பிடி போட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள தே.மு.தி.க., விற்கு ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
தி.மு.க., வில் யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் சில அ.தி.மு.க., நிர்வாகிகளை வளைத்து போட்டு எளிதாக வெற்றி பெற்றுவிடலாம் என, தி.மு.க., முக்கிய நிர்வாகிகள் மனக்கணக்கு போட்டுள்ளனர்.
இதனாலேயே அறிமுக வேட்பாளராக தியாதுருகம் பேரூர் செயலாளர் மலையரசனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாக தெரிகிறது. இதனிடையே தே.மு.தி.க., களம் இறங்கும் என்ற எதிர்பார்ப்புக்கு மாறாக கள்ளக்குறிச்சியில் அ.தி.மு.க., நேரடியாக போட்டியிடும் என்ற அறிவிப்பு வெளியானது.
அதைத்தொடர்ந்து வேட்பாளராக மாவட்ட செயலாளர் குமரகுரு நிறுத்தப்பட்ட செய்தி தி.மு.க., தரப்பின் நம்பிக்கையை சற்று அசைத்துப் பார்த்தது. இதையடுத்து தேர்தல் களம் சூடு பிடிக்க துவங்கி இரு தரப்பினரும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னாள் முதல்வர் பழனிசாமியின் நெருங்கிய நண்பராக உள்ள குமரகுரு, வேட்பாளராக இறங்கியதால் அக்கட்சியில் நிலவிய கோஷ்டி பூசலை துாக்கி எறிந்து விட்டு நிர்வாகிகள் பலர் களத்தில் இறங்கி அ.தி.மு.க.,வை வெற்றி பெற பிரசாரம் செய்து வருகின்றனர்.
சிலர் தங்களின் சொந்தப் பணத்தை செலவழித்து எப்படியும் குமரகுருவை வெற்றி பெற செய்தே தீருவோம் என்று தீவிர களப்பணியாற்றி வருகின்றனர். இது அக்கட்சிக்கு பெரிய பலமாக மாறி உள்ளது.
இருந்தாலும் அ.தி.மு.க.,வில் ஓரிரு நிர்வாகிகள் தி.மு.க.,விற்கு மறைமுக ஆதரவளிப்பதாக குமரகுரு கவனத்திற்கு சென்றது. அவர்களை குமரகுரு நேரடியாக அழைத்த 'லெப்ட் அண்ட் ரைட்' வாங்கியுள்ளார்.
கட்சிக்கு துரோகம் செய்தால் தேர்தல் முடிந்த கையோடு பதவியில் இருந்து துாக்கப்படுவீர் என, எச்சரித்து அனுப்பியுள்ளார்
- நமது நிருபர் -.

