
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிஷிவந்தியம்: வாணாபுரம் அடுத்த பழைய சிறுவங்கூரில், ரத்த தான முகாம் நடந்தது.
மணிமுக்தா ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் அரசு நடுநிலைப்பள்ளியில நடந்த முகாமிற்கு, மருத்துவ அலுவலர் சசிரேகா தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் தீபிகா முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர் குமாரசாமி வரவேற்றார்.
முகாமில், தற்போதைய சூழலில் ரத்தத்தின் தேவை, ரத்ததானம் செய்வதன் அவசியம், மதுப்பழக்கம் மற்றும் சிகரெட் குடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கி கூறப்பட்டது.
கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவர் விஜயகுமார் தலைமையிலான குழுவினர், தன்னார்வலர்கள், ரத்தம் சேகரித்தனர். இதில், 30 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டது. சுகாதார ஆய்வாளர் பிரசாந்த், கிராம சுகாதார செவிலியர்கள், பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.