
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், அ.தி.மு.க., இளைஞர் பாசறை மாணவர் அணி சார்பில் முன்னாள் முதல்வர் ஜெ., 77வது பிறந்த நாளை முன்னிட்டு ரத்ததான முகாம் நடந்தது.
மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் மோகன் முன்னிலை வகித்தார். நகர செயலாளர் கருப்பன் வரவேற்றார்.
வட்டார மருத்துவ அலுவலர் சிவக்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் ரத்தம் சேகரித்தனர்.
நிகழ்ச்சியில் இளைஞர் பாசறையை சேர்ந்த, 80 பேர் ரத்ததானம் வழங்கினர். இளைஞர் பாசறை இணை செயலாளர் தேசிங்குராஜா நன்றி கூறினார்.