/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரகண்டநல்லுார் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததான முகாம்
/
அரகண்டநல்லுார் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததான முகாம்
அரகண்டநல்லுார் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததான முகாம்
அரகண்டநல்லுார் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததான முகாம்
ADDED : செப் 03, 2024 11:40 PM

திருக்கோவிலுார் : அரகண்டநல்லுார் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் வாசவி கிளப் சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.
திருக்கோவிலுார் வாசவி வனிதா கிளப், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, திருக்கோவிலுார் அரசு மருத்துவமனை மற்றும் முகையூர் ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து அரகண்டநல்லுார் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் ரத்ததான முகாம் நடந்தது.
என்.எஸ்.எஸ்., அலுவலர் லாவண்யா வரவேற்றார்.
வாசவி சங்க தலைவர் சீனிவாசன், செயலாளர் மோகன், பொருளாளர் கோபால்சாமி முன்னிலை வகித்தார். மண்டல தலைவர் ராஜா சுப்பிரமணியம் ரத்ததான முகாமை துவக்கி வைத்தார்.
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை சிறப்பு மருத்துவ குழுவினர் பங்கேற்று 58 மாணவர்களிடம் ரத்த தானம் பெற்றனர். வாசவி சங்க வட்டார தலைவர் பாலாஜி உள்ளிட்டோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.