ADDED : ஆக 05, 2024 12:22 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் உலக குருதி கொடையாளர் தின விழா நடந்தது.
விழாவிற்கு, கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி, ரத்ததானம் செய்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி பேசியதாவது:
ரத்த கொடையாளர்களிடமிருந்து தானமாக பெறப்படும் ரத்தம் மூலம் ஏழை, எளிய மக்கள் பயன்பெருகின்றனர். விபத்து மற்றும் பிரசவ காலங்களில் பெண்களுக்கு ரத்த இழப்பை ஈடு செய்யும் வகையிலும் அமைந்துள்ளது.
அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இயங்கும் ரத்த சேமிப்பு மையங்கள் மூலம் பொதுமக்களுக்கு ரத்த சேவை சிறப்பாக வழங்கப்பட்டு செயல்படுகிறது.
ரத்ததானம் செய்ய விருப்பமுள்ள பொதுமக்கள் www.tngov.bloodbank.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி தங்களது பெயரை பதிவு செய்யலாம். மேலும் ரத்த மையங்களில் ரத்த இருப்பு மற்றும் முகாம் பற்றிய விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு கலெக்டர் பிரசாந்த் பேசினார்.
தொடர்ந்து உலக குருதி கொடையாளர் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை முதல்வர் (பொறுப்பு) நேரு, சுகாதார பணிகள் இணை இயக்குனர் செந்தில்குமார், மாவட்ட சுகாதார அலுவலர் ராஜா மற்றும் டாக்டர்கள், ரத்த கொடையாளர்கள் பங்கேற்றனர்.