
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் ரோட்டரி கிளப், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை சார்பில் சாரதா வித்யாஷ்ரம் பள்ளியில் ரத்ததான முகாம் நடந்தது.
பள்ளி தலைவர் கார்த்திகேயன், ரோட்டரி சங்கத் தலைவர் செந்தில்குமார் முகாமை துவக்கி வைத்தனர். டாக்டர் ராஜ விநாயகம் தலைமையிலான மருத்துவ குழுவினர் 50 யூனிட் ரத்ததானம் பெற்றனர்.
பள்ளி முதல்வர் ஷீபா பிராங்க்ளின், ரோட்டரி சங்க செயலாளர் கோதம்சந்த், சாசன தலைவர் வாசன், ரோட்டரி சங்க நிர்வாகிகள் முத்துகுமாரசுவாமி, கல்யாண் குமார், ராஜேஷ் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
ரத்ததானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.