/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பா.ம.க., வேட்பாளர் மனு தாக்கல்
/
பா.ம.க., வேட்பாளர் மனு தாக்கல்
ADDED : மார் 27, 2024 11:10 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி பா.ஜ., கூட்டணி பா.ம.க., வேட்பாளர் நேற்று மனு தாக்கல் செய்தார்.
கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் பா.ஜ., கூட்டணியின் பா.ம.க., வேட்பாளராக, தேவதாஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், ஏற்காடு பகுதியை சேர்ந்த மூத்த அரசியல் பிரமுகர். பா.ம.க.,வில் மாநில துணை தலைவராக உள்ளார்.
இவர், கூட்டணி கட்சியினருடன் மாவட்ட தேர்தல் அலுவலகமான கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஷ்ரவன்குமாரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். பா.ம.க., மாவட்ட செயலாளர் தமிழரசன், பா.ஜ., மாவட்ட தலைவர் அருள், த.மா.கா., மாவட்ட தலைவர் பாண்டியன், அ.ம.மு.க., மாவட்ட செயலாளர் சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.

