/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
போர்வெல் மோட்டார் பழுது: குடிநீருக்கு மக்கள் அவதி
/
போர்வெல் மோட்டார் பழுது: குடிநீருக்கு மக்கள் அவதி
ADDED : மே 13, 2024 06:10 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கோட்டைமேடு பகுதியில் போர்வெல் மினி டேங்க் மோட்டார் பழுதடைந்ததால் இப்பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி கோட்டைமேடு பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் மினி டேங்க் அமைக்கப்பட்டு போர்வெல் மோட்டார் மூலம் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், போர்வெல் மோட்டார் பழுதடைந்து பல மாதங்களாகியும் சீரமைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. கோடை காலமான தற்போது குடிநீர் கிடைக்காமல் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பழுதான போர்வெல் மோட்டாரை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.
வெயில் தாக்கத்தால் தண்ணீர் இன்றி அல்லல்படும் அப்பகுதி மக்கள் குடிநீர் தேடி, வெகுதுாரம் செல்லும் நிலை உள்ளது. எனவே இப்பகுதி மக்களின் நலன் கருதி, பழுதடைந்துள்ள மினி டேங்க் போர்வெல் மோட்டாரை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.