/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கோட்டைமேட்டில் போர்வெல் மோட்டார் பழுது நீக்கம்
/
கோட்டைமேட்டில் போர்வெல் மோட்டார் பழுது நீக்கம்
ADDED : மே 16, 2024 03:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியால், மினி டேங்க்கில் புதிய மோட்டார் பொருத்தப்பட்டு குடிநீர் விநியோகம் துவங்கியது.
கள்ளக்குறிச்சி கோட்டைமேடு பகுதியில் போர்வெல் மினி டேங்க் மோட்டார் பழுதடைந்தது. இதனால், அப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் தடைபட்டது. இதனால், குடிநீர் இன்றி அப்பகுதி மக்கள் அவதியடைந்து வந்தனர்.
இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து, நேற்று வேறு புதிய மோட்டார் பொருத்தப்பட்டு மீண்டும் குடிநீர் விநியோகம் துவங்கியது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.