ADDED : செப் 07, 2024 05:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி :
கள்ளக்குறிச்சி அருகே மதுபாட்டில் விற்பனை செய்தவரை கைது செய்து, வங்கி கணக்கினை முடக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் கனகவள்ளி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, நீலமங்கலம் நரிகுறவர் காலனியை சேர்ந்த பால்துரை மகன் விஜய்,37; என்பவர் வீட்டில் மதுபாட்டில் விற்பனை செய்தது தெரிந்தது.
இதையடுத்து விஜயினை கைது செய்து, அவரிடமிருந்த 10 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் விஜயின் வங்கி கணக்கினை முடக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.