ADDED : மே 28, 2024 11:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : வரஞ்சரம் அருகே மதுபாட்டில் விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
வரஞ்சரம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, ஈயனுார் ரயில்வே கேட் அருகே, வரஞ்சரத்தை சேர்ந்த கார்மேகம் மகன் சுகுமார்,35; என்பவர் மதுபாட்டில் விற்றது தெரிந்தது. தொடர்ந்து, சுகுமாரை கைது செய்து, அவரிடமிருந்த 40 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.