ADDED : ஜூன் 14, 2024 07:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்: அரகண்டநல்லுார் ஏரிக்கரை பகுதியில் அரகண்ட நல்லுார் இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
அதில் அவர் டாஸ்மாக் மது பாட்டில்களை கள்ளத்தனமாக விற்றது தெரியவந்தது.உடன் அவரிடமிருந்து 20க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்து, ஆவியூரைச் சேர்ந்த இளங்கோ, 42; என்பவரை கைது செய்தனர்.