/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வீட்டின் சீல் உடைப்பு: தம்பதி மீது வழக்கு
/
வீட்டின் சீல் உடைப்பு: தம்பதி மீது வழக்கு
ADDED : ஆக 26, 2024 09:23 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் நீதிமன்ற உத்தரவு மூலம் சீல் வைக்கப்பட்ட வீட்டின் பூட்டை உடைத்து தங்கிய கணவன், மனைவி மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
கள்ளக்குறிச்சி, காந்திரோட்டை சேர்ந்தவர் செல்வராஜ், 63; இவர், கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் வங்கியில், 3 கோடியே 62 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடனாக வாங்கியுள்ளார்.
பணத்தை திரும்ப செலுத்தாததால் நீதிமன்ற உத்தரவின்பேரில், செல்வராஜின் வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில், செல்வராஜ் மற்றும் அவரது மனைவி ராணி ஆகிய இருவரும் கடந்த 9ம் தேதி வீட்டின் பூட்டை உடைத்து அத்துமீறி தங்கியுள்ளனர்.
இது குறித்து தனியார் வங்கி மேலாளர் ராஜவேந்தன் அளித்த புகாரின் பேரில், செல்வராஜ், ராணி இருவர் மீதும் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.