/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தாய்ப்பால் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
/
தாய்ப்பால் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : ஆக 06, 2024 06:56 AM

சின்னசேலம் : சின்னசேலத்தில் நேற்று உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு தாய்ப்பால் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
தொட்டியம் லண்டன் காலேஜ் ஆப் நர்சிங் செவிலியர் கல்லுாரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற ஊர்வலத்திற்கு, கல்லுாரி தலைவர் ரேவதி முனியகுமார் தலைமை தாங்கினார்.
சுகாதார ஆய்வாளர் ராஜா வரவேற்றார். ரோஷினி, சிவரஞ்சனி முன்னிலை வகித்தனர்.
ஊர்வலத்தை முதல்வர் சுமதி, இனியன் துவக்கி வைத்தனர்.
கல்லுாரியில் துவங்கிய ஊர்வலத்தில், பி.எஸ்சி., நர்சிங் மாணவ, மாணவியர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி முக்கிய சாலை வழியாக தாய்ப்பாலின் அவசியம், முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திச் சென்றனர்.
ஊர்வலத்தை கல்லுாரி பேராசிரியர்கள் வழி நடத்திச் சென்றனர்.