ADDED : ஆக 12, 2024 06:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரம் இன்னர்வீல் கிளப் சார்பில் தாய்ப்பால் வார விழா நடந்தது.
அரசு மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சிக்கு, இன்னர்வீல் கிளப் தலைவி சுபாஷினி தலைமை தாங்கினார். செயலாளர் உஷாதேவி வரவேற்றார். தலைமை மருத்துவர் ராஜ்மோகன், டாக்டர்கள் அறிவழகன், வளர்மதி, மோனிஷா ஆகியோர் கர்ப்பிணிகளுக்கு பேறுகால சந்தேகங்கள் குறித்து ஆலோசனை வழங்கினர்.
இன்னர் வீல் கிளப் சார்பில் 50 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தி ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.
இன்னர்வீல் கிளப் முன்னாள் தலைவிகள் கலாவதி, தீபா, கலாவதி, அகல்யா, அனிதா, சித்ரா, இந்துமதி, ஜெய்சக்தி, பாரதி ஆகியோர் தாய்பாலின் சிறப்பு பற்றி பேசினர்.