/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பழக்கடை பூட்டை உடைத்து திருட்டு
/
பழக்கடை பூட்டை உடைத்து திருட்டு
ADDED : மார் 12, 2025 10:11 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அருகில், பழக்கடையில் பணம் திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த விருகாவூரை சேர்ந்தவர் சிவபெருமாள்,45; அதே பகுதி பஸ்நிறுத்தம் அருகே பழக்கடை வைத்துள்ளார். கடந்த, 10ம் தேதி வியாபாரம் முடிந்து கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
நேற்று முன்தினம் காலை வந்து பார்த்த போது, கடையின் பூட்டு உடைந்திருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடைக்குள் சென்று பார்த்தபோது, அங்கிருந்த ரூ.3,500 பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரிந்தது. புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.