/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கன்று வீச்சு நோய் தடுப்பூசி முகாம் மாவட்டத்தில் இன்று துவக்கம்
/
கன்று வீச்சு நோய் தடுப்பூசி முகாம் மாவட்டத்தில் இன்று துவக்கம்
கன்று வீச்சு நோய் தடுப்பூசி முகாம் மாவட்டத்தில் இன்று துவக்கம்
கன்று வீச்சு நோய் தடுப்பூசி முகாம் மாவட்டத்தில் இன்று துவக்கம்
ADDED : செப் 18, 2024 05:12 AM
கள்ளக்குறிச்சி : கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கன்று வீச்சு நோய் தடுப்பூசி முகாம் நாளை இன்று துவங்கி அக்.15ம் தேதி வரை நடக்கிறது.
கால்நடைகளுக்கு ஏற்படும் கருச்சிதைவு நோயால் கன்று ஈனுதல், பால் உற்பத்தி உள்ளிட்ட முக்கிய பணிகள் தடைபட்டு வருகிறது. இதனை தவிர்ப்பதற்காக தேசிய கால்நடைகள் நோய் கட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ் 4வது சுற்று கன்று வீச்சு நோய்க்கான தடுப்பூசி திட்டம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின்கீழ் ஆண்டிற்கு மூன்று முறை கால்நடைகளுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றது. மேலும் 4 மாதம் முதல் 8 மாத வயதுடைய கிடேரி கன்றுகளுக்கு கருச்சிதைவு நோய்க்கான தடுப்பூசி போடப்படுவது அவசியம். ஒருமுறை வாழ்நாள் தடுப்பூசி அளிக்கப்படுவதால் நீண்டகால எதிர்ப்பு சக்தியை உறுதிப்படுத்துகிறது.
மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கன்று வீச்சு நோய் தடுப்பூசி திட்டம் சார்ந்த தடுப்பூசி முகாம் நாளை 18ம் தேதி முதல் வரும் அக்.15 ம் தேதி முடிய (27 நாட்கள்) தொடர்ந்து நடக்கிறது. கால்நடைகளை வளர்க்கும் விவசாய பெருமக்கள் தங்களது கால்நடைகளுடன் தடுப்பூசி முகாமில் பங்கேற்ற பயன்பெற கலெக்டர் பிரசாந்த் அறிவுறுத்தியுள்ளார்.