ADDED : செப் 29, 2026 05:21 PM
அ நிறம் | அளவு
சங்கராபுரம்: சங்கராபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் என்.எஸ்.எஸ்., முகாம் துவக்க விழா நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் ராமசாமி தலைமை தாங்கினார் என்.எஸ்.எஸ்., அலுவலர் பாக்யராஜ் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக பேரூராட்சி சேர்மன் ரோஜாரமணி , பொது சேவைக் கூட்டமைப்பு நிர்வாகிகள் முத்துக்கருப்பன், குசேலன், விஜயகுமார், சுதாகரன் வாழ்த்திப் பேசினர்.
மாவட்ட கல்வி அலுவலர் ஜோதிமணி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்டார். உதவி தலைமை ஆசிரியர் முகமது கவுஸ் நன்றி கூறினார்.
