/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அனுமதியின்றி வைக்கப்படும் பேனர்கள் அகற்றப்படுமா?: திருக்கோவிலுார் நகரில் போலீஸ் மெத்தனம்
/
அனுமதியின்றி வைக்கப்படும் பேனர்கள் அகற்றப்படுமா?: திருக்கோவிலுார் நகரில் போலீஸ் மெத்தனம்
அனுமதியின்றி வைக்கப்படும் பேனர்கள் அகற்றப்படுமா?: திருக்கோவிலுார் நகரில் போலீஸ் மெத்தனம்
அனுமதியின்றி வைக்கப்படும் பேனர்கள் அகற்றப்படுமா?: திருக்கோவிலுார் நகரில் போலீஸ் மெத்தனம்
ADDED : மே 13, 2024 06:08 AM
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் நகராட்சியில் திரும்பிய பக்கமெல்லாம் பேனர்கள் வைக்கப்பட்டிருப்பதால், போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக உள்ளது. இதனை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுவெளியில் பேனர்கள் வைக்க நீதிமன்றம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனைக் கடுமையாக பின்பற்ற வேண்டியது காவல் துறையின் கையில் உள்ளது. ஆனால் திருக்கோவிலுாரில் திரும்பிய பக்கம் எல்லாம் பேனர் கலாசாரமாக உள்ளது.
கடந்த சில நாட்களாக குறிப்பாக தேர்தல் விதிமுறை அமலில் இருக்கும் தற்போது கூட ஐந்து முனை சந்திப்பு, நான்கு முனை சந்திப்பு, சந்தைதப்பேட்டை என நகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் பிறந்தநாள் விழா, கடை விளம்பரங்கள், பள்ளி, கல்லுாரி விளம்பரங்கள் என அனுமதி பெறாமல் ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.
இது போன்ற பேனர்களை காவல்துறையும், நகராட்சி நிர்வாகமும் இணைந்து அகற்ற வேண்டும். அத்துடன் அனுமதி இன்றி பேனர்கள் வைப்போர் மீது போலீசார் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனால் இதனை எல்லாம் போலீசார் கண்டும் காணாமல் கண்ணை மூடிக்கொண்டு செல்வதால் அனுமதி பெறாமலேயே ஆங்காங்கே பேனர் வைப்பது என்பது அதிகரித்துள்ளது.
இதுபோன்று பேனர்கள் வைப்பதால் சாலையில் வாகன ஓட்டிகள் செல்லும்போது கவனம் சிதறுகிறது. இதுனால், விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.
அதுமட்டுமின்றி, கோடை காலம் என்பதால் மாலை நேரங்களில் தரைக்காற்று அதிகரித்து மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இது போன்ற தருணங்களில் பேனர்கள் அறுந்து இரு சக்கர வாகனங்களில் செல்வோர் மீது விழுந்து விபத்துகள் ஏற்படும், எனவே அசம்பாவித சம்பவங்கள் நிகழும் முன்பாக நகரில் வைக்கப்பட்டிருக்கும் பேனர்களை அகற்ற சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து நிரந்தர தீர்வு காண வேண்டும்.