/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மத்தியில் காங்., ஆட்சி அமைந்தால் பெண்களுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் வேட்பாளர் மலையரசன் பிரசாரம்

ADDED : ஏப் 07, 2024 05:56 AM

ரிஷிவந்தியம், : ரிஷிவந்தியத்தில் தி.மு.க., வேட்பாளர் மலையரசன் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் பிரசாரம் மேற்கொண்டார்.
ரிஷிவந்தியத்தில் பிரசாரம் மேற்கொண்ட, கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி தி.மு.க., வேட்பாளர் மலையரசன் பேசியதாவது:
தமிழக முதல்வர் ஸ்டாலின் காலை உணவு திட்டம், பெண்களுக்கு கட்டணமில்லா பஸ் பயணம், மகளிர் உரிமைத் தொகை உட்பட பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்.
ரிஷிவந்தியத்தில் பயணியர் நிழற்குடைகள், பள்ளி கட்டடம், சாலை விரிவாக்கம், கழிவுநீர் கால்வாய் என மக்களின் அடிப்படை தேவைகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
தற்போதைய லோக்சபா தேர்தலில் காங்., தலைமையில் மத்திய அரசு அமைந்தால், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் 400 ரூபாயாக உயர்த்தப்படும்.
மகாலட்சுமி திட்டத்தில் ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும். ஜி.எஸ்.டி., வரி மாற்றி அமைக்கப்படும். எனவே இந்த தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் ஓட்டளிக்க வேண்டும்.
இவ்வாறு வேட்பாளர் மலையரசன் பேசினார்.
ஒன்றிய செயலாளர் பெருமாள், ஒன்றிய சேர்மன் வடிவுக்கரசி சாமிசுப்ரமணியன், தி.மு.க., தொழிலாளரணி மாவட்ட தலைவர் சிவமுருகன், சிறுபான்மை அணி தலைவர் இதயதுல்லா, கிளைச் செயலாளர் கண்ணன், மாவட்ட கவுன்சிலர் கோவிந்தராஜி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் ராஜி, ஊராட்சி தலைவர் வினிதா மகேந்திரன், நிர்வாகி செல்வகுமார், முன்னாள் ஊராட்சி தலைவர் துரைராஜ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.