/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் ஒரே சமூகம்: இதில் யாருக்கு சாதகம்
/
பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் ஒரே சமூகம்: இதில் யாருக்கு சாதகம்
பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் ஒரே சமூகம்: இதில் யாருக்கு சாதகம்
பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் ஒரே சமூகம்: இதில் யாருக்கு சாதகம்
ADDED : மார் 22, 2024 10:47 PM
கள்ளக்குறிச்சியில் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் பார்க்கவ குல உடையார் சமூகத்தினர் என்பதால் சமூக ஓட்டுக்கள் யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழக அரசியலில் ஜாதி கட்சிகள் ஒரு பக்கம் என்றால், சமத்துவம் பேசும் கட்சிகளும் ஜாதி அடிப்படையில் வேட்பாளர்களை தேர்வு செய்கிறது. இதற்கு எடுத்துக்காட்டு தான் கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி.
இந்த தொகுதியில் பார்க்கவ குல உடையார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். சமத்துவம் பேசும் திராவிட கட்சிகள் குறிப்பாக தி.மு.க., வேட்பாளர் மலையரசன், அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுரு, பா.ம.க., வேட்பாளர் தேவதாஸ் என 3 பேரும் பார்க்கவ குல உடையார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான். அதேபோல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகதீச பாண்டியன் துளுவவெள்ளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். இச்சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இப்பகுதியில் பரவலாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதான கட்சி வேட்பாளர்கள் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் தொகுதியில் உள்ள ஜாதிய உணர்வு மிக்க அந்த சமூக வாக்காளர்கள் யாருக்கு ஓட்டு போடுவது என்ற குழப்ப நிலையில், தங்களுக்கு விருப்பமான கட்சி அடிப்படையிலேயே ஓட்டளிப்பார்கள் என கூறப்படுகிறது. இது யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம் என்பது ஓட்டு எண்ணிக்கை நாளன்று தெரிந்து விடும்.

