/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திறன் மேம்படுத்துதல் கருத்தரங்கம்; கலெக்டர் துவக்கி வைப்பு
/
திறன் மேம்படுத்துதல் கருத்தரங்கம்; கலெக்டர் துவக்கி வைப்பு
திறன் மேம்படுத்துதல் கருத்தரங்கம்; கலெக்டர் துவக்கி வைப்பு
திறன் மேம்படுத்துதல் கருத்தரங்கம்; கலெக்டர் துவக்கி வைப்பு
ADDED : மார் 15, 2025 06:32 AM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் வேளாண் சார்ந்த தொழில்களின் மூலம் உற்பத்தி செய்த பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான திறன் மேம்படுத்துதல் கருத்தரங்கம் நேற்று நடந்தது.
கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி, கருத்தரங்கை துவக்கி வைத்தார்.
மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சந்திரசேகரன், வேளாண் இணை இயக்குநர் சத்தியமூர்த்தி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ரஞ்சித், பயிற்சியாளர்கள் செந்தமிழரசன், அருள், கார்த்திக், பசுபதி வெங்கட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கலெக்டர் பிரசாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:
சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூலம் தயாரிக்கும் உணவு மற்றும் விவசாயம் சார்ந்த உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துதல், பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்தல், சிறுதானிய உணவுகளுக்கு மதிப்பு கூட்டுதல், தொழிலை ஆரம்பம் முதலே திறம்பட நடத்துதல், விளம்பரம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து பயிற்சியாளர்கள் மூலம் விளக்கி கூறப்பட்டது.
தொழில் முனைவோர் கருத்தரங்களில் பங்கேற்று, பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.