/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மேம்பாலத்தில் இருந்து கார் கவிழ்ந்து விபத்து; சின்னசேலம் அருகே 6 பேர் காயம்

ADDED : ஜூலை 22, 2024 01:08 AM

கள்ளக்குறிச்சி : சின்னசேலம் அருகே புறவழிச்சாலை மேம்பாலத்தில் இருந்து கார் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் காயமடைந்தனர்.
கோயம்புத்துார் வெங்கடேஸ்வரா காலனியைச் சேர்ந்தவர் முருகன் மகன் முத்துக்குமார், 35; இவர் தனது குடும்பத்தினருடன் ஸ்கார்பியோ காரில் நேற்று முன்தினம் திருவண்ணாமலை கோவிலுக்குச் சென்றார்.
அங்கு கிரிவலம் சென்றவர்கள் நேற்று காலை திருவண்ணாமலையில் இருந்து கோயம்புத்துாருக்கு புறப்பட்டனர். காலை 11:00 மணியளவில் சின்னசேலம் அருகே அம்மையகரம் ரயில்வே மேம்பாலத்தில் சென்ற போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பாலத்தில் இருந்து கீழே தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், காரில் சென்ற முத்துக்குமார், இவரது மனைவி பிரியா, 32; மகன் பாலஹரிகரன்,13; முத்துபாண்டி, 40; இவரது மனைவி தேன்மொழி, 35; மகன் கருப்பசாமி, 6; ஆகிய 6 பேரும் காயமடைந்தனர்.
தகவலறிந்த சின்னசேலம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனார். இதில், பலத்த காயமடைந்த தேன்மொழி, பிரியா ஆகிய இருவரும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
விபத்து குறித்து சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.