/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
போதையில் தகராறு 2 பேர் மீது வழக்கு
/
போதையில் தகராறு 2 பேர் மீது வழக்கு
ADDED : மே 10, 2024 01:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே குடிபோதையில் தாக்கிக் கொண்டு 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
திருக்கோவிலுார் அடுத்த பரடாப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரம் மகன் மணிகண்டன், 34; அதே ஊரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மதுபானம் வாங்க சென்றார்.
அங்கு துறிஞ்சிப்பாட்டு கிராமத்தைச் சேர்ந்த இளங்கோவன், 42; என்பவர் மது அருந்திக் கொண்டிருந்தார்.
அப்போது அவர்களுக்கிடையே போதையில் தகராறு ஏற்பட்டு இரு தரப்பினரும் மது பாட்டில்களால் தாக்கிக் கொண்டர்.
இருவரும் அளித்த புகாரின் பேரில் மணிகண்டன், இளங்கோவன் ஆகிய இருவர் மீதும் திருப்பாலபந்தல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.