நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : ஈயனுார் ரயில்வே கேட் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் தானியம் காய வைத்த 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த விருகாவூரில் இருந்து அசகளத்துார் செல்லும் சாலையில், ஈயனுார் ரயில்வே கேட் பகுதியில் எள் உள்ளிட்ட தானியங்கள் காயவைக்கப்பட்டிருந்தது. சாலையில் கொட்டப்பட்டிருந்த தானியத்தால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். இதையடுத்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையில் தானியம் காய வைத்தாக ஈயனுாரை சேர்ந்த உலகநாதன், எஸ்.ஒகையூரை சேர்ந்த மணிகண்டன் ஆகிய இருவர் மீதும் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்தனர்.

