/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மறியலில் ஈடுபட்ட 20 பேர் மீது வழக்கு
/
மறியலில் ஈடுபட்ட 20 பேர் மீது வழக்கு
ADDED : மே 03, 2024 12:05 AM
உளுந்துார்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 20 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்
உளுந்துார்பேட்டை தாலுகா நாச்சியார் பேட்டையில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வீட்டுமனை இல்லா ஆதிதிராவிடர்கள் 104 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டு இருந்தது.
எஞ்சியிருந்த 40 செண்டு நிலத்தில் வெளியூரை சேர்ந்த 14 பேர்களுக்கு வீட்டு மனை பட்டா வாங்கப்பட்டது. இதனை அறிந்த உள்ளூர் மக்கள் வெளியூர் நபர்களுக்கு எப்படி வீட்டுமனை பட்டா வழங்கலாம் என கேட்டு நேற்று முன் தினம் விருத்தாசலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பேரில் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
உளுந்துார்பேட்டை போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட நாச்சியார்பேட்டை பகுதியைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் உள்ளிட்ட 20 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.