/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
/
பெண்ணை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
ADDED : ஆக 18, 2024 04:14 AM
கள்ளக்குறிச்சி, : சின்னசேலம் அருகே பயிர் செய்வது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் பெண்ணைத் தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
சின்னசேலம் அடுத்த கனியாமூரைச் சேர்ந்தவர் விஜயகுமார் மனைவி செல்வி, 46; அதே பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். இருவருக்குமிடையே அரசு புறம்போக்கு நிலத்தை அனுபவம் செய்வது தொடர்பாக முன்விரோதம் உள்ளது.
இந்நிலையில், கடந்த 15ம் தேதி செல்வி பயிர் செய்ய முயன்ற போது, இந்த இடம் தங்களுக்கு சொந்தம் என லட்சுமணன் தரப்பினர் கூறி செல்வியை கல்லால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
செல்வி அளித்த புகாரின் பேரில் லட்சுமணன், அவரது மனைவி செல்லம்மாள், மகள் ரஞ்சிதா ஆகிய 3 பேர் மீதும் சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

