/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பொது இடங்களில் மது 7 பேர் மீது வழக்கு
/
பொது இடங்களில் மது 7 பேர் மீது வழக்கு
ADDED : மே 10, 2024 01:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பகுதியில் பொது இடங்களில் மது அருந்திய 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
கள்ளக்குறிச்சி உட்கோட்ட காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் பொது இடங்களில் மது அருந்தும் நபர்கள் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி கள்ளக்குறிச்சி காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் அரியபெருமானுார் வினோத், கண்டாச்சிமங்கலம் மாரிமுத்து, கள்ளக்குறிச்சி சரவணன் ஆகியோர் மீதும், சின்னசேலம் பகுதியில் மரவானத்தம் சக்திவேல், சின்னசேலம் ராதன், கீழ்குப்பம் பகுதியில் வி.மாமந்துார் விஜயகுமார், கரியாலுாரில் பொன்னுசாமி ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.