/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு
/
மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு
ADDED : ஆக 16, 2024 06:33 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மனைவியைத் தாக்கிய கணவன் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
சின்னசேலம் அடுத்த கல்லாநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் மாரி மனைவி சோபியா, 29; கள்ளக்குறிச்சி சமூக நலத்துறை அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிகிறார். குடும்ப பிரச்னை காரணமாக கணவரைப் பிரிந்து தனியாக வசிக்கிறார்.
கடந்த 2ம் தேதி கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் நின்றிருந்த சோபியாவை குடும்பம் நடத்த வருமாறு மாரி அழைத்துள்ளார். அப்போது, ஏற்பட்ட பிரச்னையில் மாரி, மனைவி சோபியாவை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்த புகாரின் பேரில் மாரி மீது கள்ளக்குறிச்சி போலீசார் நேற்று முன்தினம் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.