/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பெண்ணை தாக்கிய தந்தை, மகன் மீது வழக்கு
/
பெண்ணை தாக்கிய தந்தை, மகன் மீது வழக்கு
ADDED : ஆக 27, 2024 03:59 AM
ரிஷிவந்தியம் : பாசாரில் பெண்ணை தாக்கியது தொடர்பாக தந்தை, மகன்கள் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
ரிஷிவந்தியம் அடுத்த பாசார் கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி நேற்று முன்தினம் திடீரென மாயமாகினார். உடன் அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி விசாரித்தனர்.
அதில், அதே கிராமத்தை சேர்ந்த வேலு மகன் கோவிந்தராஜ் சிறுமியை கடத்தி இருக்கலாம் என தகவல் கிடைத்தது.
அதன்பேரில், சிறுமியின் தாய் கோவிந்தம்மாள் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் வீட்டிற்கு சென்று கேட்டுள்ளார்.
அப்போது, அங்கமுத்து மகன் வேலு மற்றும் இவரது மகன் காட்டுரான் ஆகிய இருவரும் கோவிந்தம்மாளை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில், அங்கமுத்து மகன் வேலு மற்றும் இவரது மகன்கள் கோவிந்தராஜ், காட்டுரான் ஆகிய 3 பேர் மீதும் ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.