/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தியாகதுருகம் வார சந்தையில் ரூ.1 கோடி கால்நடை விற்பனை
/
தியாகதுருகம் வார சந்தையில் ரூ.1 கோடி கால்நடை விற்பனை
தியாகதுருகம் வார சந்தையில் ரூ.1 கோடி கால்நடை விற்பனை
தியாகதுருகம் வார சந்தையில் ரூ.1 கோடி கால்நடை விற்பனை
ADDED : ஜூன் 16, 2024 06:45 AM
தியாகதுருகம்: தியாகதுருகம் பஸ் நிலையத்தையொட்டி, 100 ஆண்டுகள் பாரம்பரியமான வார சந்தை சனிக்கிழமை தோறும் நடந்து வருகிறது.
சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் வளர்க்கும் ஆடு, மாடுகளை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
லோக்சபா தேர்தல் தேதி அறிவித்த பின் பணம் எடுத்துச் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக தேர்தல் முடிவு வெளியானது வரை கால்நடை விற்பனை மந்தமாகவே இருந்தது.
இந்நிலையில் பக்ரீத் பண்டிகை நாளை 17ம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு நேற்று தியாகதுருகத்தில் நடந்த வார சந்தையில் ஆடு, மாடுகள் விற்பனை களைகட்டியது.
வெளியூரிலிருந்து அவற்றை வாங்குவதற்காக அதிக அளவில் வியாபாரிகள் சந்தைக்கு குவிந்தனர். குறிப்பாக ஆடுகளை வாங்குவதில் கடும் போட்டி நிலவியதால் அதிக விலைக்கு விற்பனையானது. இதனால் அவற்றை விற்பனைக்காக கொண்டு வந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்று 353 ஆடுகளும் 365 மாடுகளும் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. இவை அனைத்தும் காலை 9:00 மணிக்குள்ளாகவே விற்பனையாகி முடிந்தது. நேற்று ஒரே நாளில் 1 கோடி ரூபாய்க்கு கால்நடை விற்பனை நடந்தது.பல வாரங்களுக்கு பிறகு தியாகதுருகம் வார சந்தையில் நேற்று கால்நடை விற்பனை கன ஜோராக நடந்தது.