/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குறுவட்ட அளவிலான விளையாட்டி போட்டிகள்
/
குறுவட்ட அளவிலான விளையாட்டி போட்டிகள்
ADDED : ஆக 22, 2024 11:57 PM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நாகலுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
கள்ளக்குறிச்சி குறுவட்டத்திற்குட்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டி கடந்த 7ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
நாகலுார் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் தினமும் நடைபெறும், 15 வகையான போட்டிகளில், 40க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். 14, 17 மற்றும் 19 வயதுடைய மாணவ, மாணவிகளுக்கு கேரம், வாலிபால், கபடி, கோ-கோ, குண்டு எறிதல் உட்பட 15 வகையான விளையாட்டு போட்டிகள் நடக்கிறது.
இதில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க உள்ளனர். பள்ளி தலைமை ஆசிரியர் அருள்மணி மேற்பார்வையில் உடற்கல்வி ஆசிரியர்கள் போட்டிகளை நடத்தி வருகின்றனர்.