ADDED : ஜூன் 16, 2026 11:50 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி குறித்த களப்பயிற்சியாளர்களுக்கான பயிற்சி வகுப்பு துவங்கியது.
மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபட உள்ள மாவட்ட அளவிலான 50 பயிற்சியாளர்களுக்கு, 3 நாட்கள் பயிற்சி வகுப்பு கலெக்டர் பத்மஜா தலைமையில் நேற்று துவங்கியது. கணக்கெடுப்பில் துல்லியமான விபரங்கள் சேகரித்தல், பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக நலத்திட்டங்கள் உருவாக்கத்திற்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகள் முக்கியம் என பயிற்சியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும் களப்பணியாளர்கள் அனைவரும் எவ்வித தொய்வுமின்றி துல்லியமான விபரங்களை சேகரிக்க தங்களை தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். பயிற்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தனலட்சுமி, சென்னை மக்கள் தொகை கணக்கெடுப்பு மாவட்ட பொறுப்பாளர் மூர்த்தி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
