/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு பள்ளியில் நுாற்றாண்டு விழா
/
அரசு பள்ளியில் நுாற்றாண்டு விழா
ADDED : மார் 04, 2025 09:00 PM

சங்கராபுரம் : சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நுாற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.
பள்ளி வளாகத்தில் நடந்த விழாவிற்கு, சங்கராபுரம் ஒன்றிய தலைவர் திலகவதி நாகராஜன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் செல்வி வரவேற்றார். ஊராட்சி தலைவர் வாசுகி கருணாநிதி, வட்டார கல்வி அலுவலர்கள் அண்ணாதுரை, சீனிவாசன் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர் உதயசூரியன் எம்.எல்.ஏ., கலை நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு வழங்கி பேசினார்.
விழாவில் அ.பாண்டலம் ஊராட்சி தலைவர் பாப்பாத்தி நடராஜன், பள்ளி மேலாண்மைக குழு உறுப்பினர்கள், வார்டு கவுன்சிலர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.