/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தில் கல்வி பயில விண்ணப்பம் வரவேற்பு
/
மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தில் கல்வி பயில விண்ணப்பம் வரவேற்பு
மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தில் கல்வி பயில விண்ணப்பம் வரவேற்பு
மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தில் கல்வி பயில விண்ணப்பம் வரவேற்பு
ADDED : ஜூன் 16, 2024 06:44 AM
கள்ளக்குறிச்சி: மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தின் தொழிற் கல்வி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் ஷ்ரவன்குமார் செய்திகுறிப்பு:
மத்திய அரசின் காலணி பயிற்சி நிறுவனத்தில், காலணி தயாரிப்பு தொடர்புடைய பாட பிரிவுகளில் படிக்க 2024-25ம் ஆண்டிற்கான தொழிற்கல்வி சேர்க்கைக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் 2 ஆண்டு கால பயிற்சியான காலணி உற்பத்தி மற்றும் வடிவமைப்பு டிப்ளமோவுக்கும், ஓராண்டு பயிற்சியான காலணி வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு வளர்ச்சியில் மேம்பட்ட சான்றிதழ் பயிற்சிக்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அதேபோல் ஓராண்டு பயிற்சியான காலணி உற்பத்தி தொழில்நுட்பத்தில் மேம்பட்ட சான்றிதழ் பயிற்சி, 6 மாத கால பயிற்சியான காலணி வடிவமைப்பு மற்றும் உற்பத்தி பயிற்சிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும், ஒன்றரை ஆண்டுகால பயிற்சியான காலணி தொழில்நுட்பத்தில் முதுகலை டிப்ளமோ, ஓராண்டுகால பயிற்சியான காலணி தொழில் நுட்பத்தில் போஸ்ட் டிப்ளமோவுக்கு ஏதேனும் ஒரு பட்டபடிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். அனைத்து பாடப்பிரிவுகளும் ஆங்கில வழி கற்றல் முறையாகும். தேர்ச்சி பெற்ற தகுதி வாய்ந்த மாணவ, மாணவிகளுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 10ம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் மத்திய காலணி பயிற்சி நிறுவனத்தின் தொழிற்கல்வி சேர்க்கைக்கு கலெக்டர் அலுவலகத்தில் வரும் 17 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
மேலும் கூடுதல் விபரங்களை சேர்க்கை ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் 93848 48789 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.