/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தொழுநோய் கண்டறியும் பணி மத்திய சுகாதார குழு ஆய்வு
/
தொழுநோய் கண்டறியும் பணி மத்திய சுகாதார குழு ஆய்வு
ADDED : பிப் 28, 2025 05:17 AM

கள்ளக்குறிச்சி,: கள்ளக்குறிச்சியில் தொழுநோய் கண்டறியும் பணியை மத்திய சுகாதாரக் குழுவினர் ஆய்வு செய்தனர்.
கள்ளக்குறிச்சி நகராட்சியில், 13 வார்டுகளில் தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் சுகாதார தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாக, நோய் கண்டறியும் பணி நடக்கிறது. இந்த பணியை, 36 சுகாதார தன்னார்வலர்கள் கொண்ட 18 குழுவினர், மேற்கொண்டு வருகின்றனர்.
இதில், தொழுநோயின் ஆரம்ப அறிகுறிகள் கண்டறியப்பட்டு, மருத்துவ குழுவினர் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், மத்திய சுகாதார குழுவைச் சார்ந்த கூடுதல் இயக்குனர் சுதிர் டி வஞ்சி மற்றும் டாக்டர் சமத்துவ செல்வன் ஆகியோர், வீடு வீடாக சென்று தொழுநோய் கண்டறியும் பணியை ஆய்வு செய்தனர்.
தொழுநோய் பிரிவு துணை இயக்குனர் சுதாகர், நலக்கல்வியாளர் முருகேசன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி, மேற்பார்வையாளர்கள் கொளஞ்சியப்பன், சிவப்பிரகாசம் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் விக்னேஸ்வரன், பாலா உட்பட பலர் பங்கேற்றனர்.