/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஞானானந்தா பள்ளி பிளஸ் 2 தேர்வில் 'சென்டம்'
/
ஞானானந்தா பள்ளி பிளஸ் 2 தேர்வில் 'சென்டம்'
ADDED : மே 07, 2024 06:00 AM

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் ஞானானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இப்பள்ளியில் தேர்வு எழுதிய 78 மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். மாணவர் பத்மபிரசாத் 577, மாணவி நித்தியஸ்ரீ 566, புஷ்பவள்ளி 563 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதல் 3 இடங்களையும் பிடித்துள்ளனர்.
இதில் 2 மாணவர்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவில் 100க்கு100 மதிப்பெண் எடுத்துள்ளனர்.
தொடர் வெற்றி சாதனையாக 33வது ஆண்டாக இப்பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தலைமை ஆசிரியை ஹேமலதா, வெற்றிக்கு பாடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் நிர்வாகி முகில்வண்ணன் பாராட்டினார்.