ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் சான்றிதழ் வகுப்பு துவக்கம்
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் சான்றிதழ் வகுப்பு துவக்கம்
ADDED : செப் 07, 2026 11:14 PM
அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் ஐ.சி.டி., அகாடமி மற்றும் இன்போசிஸ் இணைந்து நடத்தும் சான்றிதழ் வகுப்புகள் துவக்க விழா நடந்தது.
கல்லுாரியின் முதல்வர் மோகனசுந்தர் தலைமை தாங்கினார். கல்லுாரி துணை முதல்வர் அசோக் முன்னிலை வகித்தார். வணிகத்துறை தலைவர் அனந்தராமன் வரவேற்றார். கல்லுாரியின் அறிவியல் புல முதல்வர் சக்திவேல் வாழ்த்திப்பேசினார்.
சிறப்பு விருந்தினராக ஐ.சி.டி., அகாடமியின் திறன் பயிற்சியாளர் நித்யா ரேவதி, இந்த வகுப்புகள் மூலம் மாணவர்கள், பொதுமக்கள் முன் பேசுதல், குழு மேலாண்மை, இலக்கு நிர்ணயம், விமர்சன சிந்தனை, குழு விவாதம், சில்லறை விற்பனை மற்றும் சர்வதேச சில்லறை சந்தைகள் செயல்பாடு பற்றி முழுமையாக அறிந்துகொள்ள முடியும் என்றார்.வணிக மேலாண்மை துறை தலைவர் ராஜா நன்றி கூறினார்.
