/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மதுவிலக்கு பிரிவு போலீசார் உட்பட 78 பேர் மாற்றம்: கல்லை எஸ்.பி., அதிரடி
/
மதுவிலக்கு பிரிவு போலீசார் உட்பட 78 பேர் மாற்றம்: கல்லை எஸ்.பி., அதிரடி
மதுவிலக்கு பிரிவு போலீசார் உட்பட 78 பேர் மாற்றம்: கல்லை எஸ்.பி., அதிரடி
மதுவிலக்கு பிரிவு போலீசார் உட்பட 78 பேர் மாற்றம்: கல்லை எஸ்.பி., அதிரடி
ADDED : ஜூலை 10, 2024 05:18 AM
கள்ளக்குறிச்சி: கள்ளச்சாராய சம்பவம் நடந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5 எஸ்.ஐ.,க்கள் மற்றும் மதுவிலக்கு போலீசார் உட்பட 78 பேரை பணியிட மாற்றம் செய்து எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச்சாராய சம்பவத்தை தொடர்ந்து எஸ்.பி., திருக்கோவிலுார் மதுவிலக்கு அமலாக்க பிரிவு சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
புதிதாக பொறுப்பேற்றுள்ள எஸ்.பி., ரஜத்சதுர்வேதி கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக அழிக்க அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.
அதன் ஒருபகுதியாக மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலுார் மற்றும் உளுந்துார்பேட்டை ஆகிய 3 மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஸ்டேஷன்களில் பணியாற்றி வரும் 2 சப் இன்ஸ்பெக்டர்கள், 21 தலைமை காவலர்கள், 13 முதல் நிலை காவலர்கள் என மொத்தம் 36 பேரை சட்டம் ஒழுங்கு பிரிவு மற்றும் நெடுஞ்சாலை ரோந்து பிரிவிற்கு கூண்டோடு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, கள்ளக்குறிச்சி மதுவிலக்கு பிரிவு சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மணலுார்பேட்டை சட்டம் ஒழுங்கு பிரிவிற்கும், உளுந்துார்பேட்டை மதுவிலக்கு பிரிவு அலெக்ஸ், திருநாவலுார் சட்டம் ஒழுங்கு பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு பதிலாக சட்டம் ஒழுங்கு பிரிவில் பணியாற்றிய வடபொன்பரப்பி ராஜசேகரன், கள்ளக்குறிச்சி மதுவிலக்கு பிரிவிற்கும், உளுந்துார்பேட்டை பிரபாவதி, உளுந்துார்பேட்டை மதுவிலக்கு பிரிவுக்கும், கச்சிராயபாளையம் ஏழுமலை திருக்கோவிலுார் மதுவிலக்கு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அதேபோன்று சட்டம் ஒழுங்கு மற்றும் நெடுஞ்சாலை ரோந்து பிரிவுகளில் பணியாற்றிய 35 தலைமை காவலர்கள், 4 முதல்நிலை காவலர்களை மதுவிலக்கு பிரிவிற்கு மாற்றம் செய்து எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.